வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கோப்பாவெளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோப்பாவெளி பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சு மூலம் உலர் உணவுப்பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள்
வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சாந்தினி பெரேரா, இணைப்புச் செயலாளரான பொன்.ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது இப்பகுதியை சேர்ந்த 285 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன