மட்டு. கல்லடி பிரதேசத்தில் கருணா அம்மானால் நிவாரணப் பொருள்கள் விநியோகம்.
மட்டக்களப்பு நகரின் கல்லடி, கல்லடி வேலூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான கருணா அம்மான் (வி.முரளிதரன்) இன்று காலை வழங்கி வைத்தார்.இப்பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள் ஊடாக வழங்கப்பட்ட இவ் நிவாரணப் பொருள்கள் வழங்கலில் அமைச்சின் இணைப்புநச் செயலாளர் பொன் ரவீந்திரன், மற்றும் அமைச்சின் அதிகாரிகளான வரதன் மாஸ்ரர், பரமானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: முரளிதரன்
யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: முரளிதரன்
புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் சிலர் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.இந்த மக்களின் மேலதிக தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

