வியாழன், 3 மார்ச், 2011


மட்டு. கல்லடி பிரதேசத்தில் கருணா அம்மானால் நிவாரணப் பொருள்கள் விநியோகம்.

மட்டக்களப்பு நகரின் கல்லடி, கல்லடி வேலூர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த  மக்களுக்கு நிவாரணப் பொருள்களை மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறி லங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான கருணா அம்மான் (வி.முரளிதரன்) இன்று காலை வழங்கி வைத்தார்.
இப்பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள் ஊடாக வழங்கப்பட்ட இவ் நிவாரணப் பொருள்கள் வழங்கலில் அமைச்சின் இணைப்புநச் செயலாளர் பொன் ரவீந்திரன், மற்றும் அமைச்சின் அதிகாரிகளான வரதன் மாஸ்ரர், பரமானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர், நிவாரணப் பொருள் களை வழங்கியதுடன் மட்டக்களப்பின் அபிவிருத்திகள் சென:று கொண்டிருக்கும் வளர்ச்சி நிலை, மேம்பாடுகள் மக்களின் வாழ்நிலை, கல்வி உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகுதிகளுக்கு அமைச்சர் நேரடியாகச் செனறு நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் நிவாரணங்களையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.