ஞாயிறு, 6 மார்ச், 2011

9 வயதிலேயே புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் உள்ள பிரிட்டனின் நகரம்!



பிரிட்டனின் மிகவும் பின்தங்கிய நகரில் ஒன்பது வயதிலேயே புகை பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்து விடுவதாக தேசிய ரீதியான கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. 

இதை விட மிகச் சிறிய வயதில் புகை பிடித்தவர்களும் இங்குள்ளனர். விளையாட்டுக்காக பாட்டன் பாட்டி பழக்கியதால் மூன்று வயதிலேயே புகை பிடித்த சம்பவமும் இங்கு நடந்துள்ளது. தென் வேல்ஸ்ஸில் உள்ள மேர்திர் டிட்பில் தான் இந்த நகரம். 


இங்கு மிகக் குறைந்த வேதனத்துக்கு தொழில் செய்பவர்களும், நலன்புரிக் கொடுப்பனவுகளில் தங்கியிருப்பவர்களும் தான் அதிகம் உள்ளனர். 

தனது ஆய்வின் போது இரண்டு மற்றும் மூன்று வயதில் புகைப் பிடித்தவர்களையும் தான் சந்தித்ததாக ஆய்வாளர் டிரேஸிபோவன் கூறுகின்றார். அவர்களின் பெற்றோர்களே இவர்களை விளையாட்டாக சிகரட் பிடிக்க வைத்துள்ளனர்.