சனி, 5 மார்ச், 2011

மன்னாரில் எண்ணெய் அகழ்வுகள் ஜூலை முதல் ஆரம்பம்!



மன்னார் கடற்பரப்பில் இவ்வருடம் ஜூலைமாதம் முதல் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானியாவின் கரின் எனர்ஜி நிறுவனத்தின் (Cairn energy) இந்தியக் கிளையான கரின் இந்தியா தெரிவித்துள்ளது. 

மன்னார் குடாப் பகுதியில் எண்ணெய் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3 ஆயிரத்து 400 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய ஒரு பகுதி கரின் இந்தியா நிறுவனத்திற்கு 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 

ஏனைய இரு பகுதிகளும் இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

2008ஆம் ஆண்டு இலங்கையின் வடமேற்கு கடற்பிராந்தியத்தில் எண்ணெய்வள ஆய்வுகளை நடத்துவதற்கும், மூன்று எண்ணெய் கிணறுகளை அகழ்வதற்கும் கரின் நிறுவனம் 10 கோடி டொலர்களை முதலிட்டுள்ளது.