சுனாமியின் கோரத் தாண்டவத்தால் மக்கள் வசிக்கத் தகுதியற்ற இடமாக மாறி முற்றிலும் அழிந்து விட்ட சென்டாய் நகரம்!
ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011
ஜப்பான் சுனாமிக்கு அங்குள்ள சென்டாய் நகரம் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய துறைமுக நகரான இங்கு 10 லட்சம் பேர் வசித்து வந்தனர். அவர்களில் இப்போது எத்தனை பேர் உயிரோடு இருக்கிறார்கள் என சொல்ல முடியாத அளவுக்கு ஏராளமானோர் சுனாமிக்கு பலியாகி உள்ளனர்.
பூகம்பம் ஏற்பட்டு அடுத்த சில வினாடிகளிலே இங்கு சுனாமி தாக்கி விட்டது. இதனால் மக்களால் சுதாரித்து தப்பிக்க கூட முடியவில்லை.
இந்த நகரில் பெரும்பாலான வீடுகள் பூகம்பத்தை தாங்கும் திறன் கொண்டதாகவே கட்டி இருந்தனர். ஆனால் பெரும் சக்தியுடன் தாக்கிய சுனாமி அந்த வீடுகளை அப்படியே பெயர்த்து எடுத்து தரைமட்டமாகி விட்டது.
2ஆம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழிவு! 3 ஆவது நாளாக மீண்டும் உலுக்கிய பூகம்பம் (காணொளி, பட இணைப்பு)
ஜப்பான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் தாக்கியதில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சென்டாய் நகரம் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ளது.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பேரழிவு கடந்த 150 ஆண்டுகளில் உலகில் எங்கும் ஏற்படாத பேரழிவாகக் கருதப்படுகிறது.
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் நாடு தான் மிகப் பெரும் அழிவை சந்தித்தது. ஹிரோஷிமா, நாகாசாகி என்ற 2 நகரங்கள் நொறுங்கின.
சனி, 12 மார்ச், 2011
பேஸ்புக் கோடீஸ்வரர்கள்
2011ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பேஸ்புக்கோடு தொடர்புடைய ஏழு பேர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் சுகர்பேர்க் இந்தப் பட்டியலில் 52வது இடத்தில் உள்ளார்.
இவரின் சொத்துப் பெறுமதி 13.5 பில்லியன் டொலர்கள். கடந்தாண்டின் நான்கு பில்லியன் பெறுமதியிலிருந்து இது 238% அதிகரித்துள்ளது.
வியாழன், 10 மார்ச், 2011
உலகின் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் ஒபாமாவை மிஞ்சிய சீன அதிபர்
உலகில் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. அதில் சீனா அதிபர் ஹீஜிந்தாவோ முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தில் இருந்தார்.
அவரை பின்னுக்கு தள்ளி விட்டு சீன அதிபர் முந்தி உள்ளார். ஒபாமா 2-வது இடத்தில் இருக்கிறார்.
சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா 3-வது இடத்திலும் ரஷிய பிரதமர் புதின் 4-வது இடத்திலும், போப் ஆண்டவர் 5-வது இடத்திலும் உள்ளனர்.
ஞாயிறு, 6 மார்ச், 2011
9 வயதிலேயே புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் உள்ள பிரிட்டனின் நகரம்!
பிரிட்டனின் மிகவும் பின்தங்கிய நகரில் ஒன்பது வயதிலேயே புகை பிடிக்கும் பழக்கம் ஆரம்பித்து விடுவதாக தேசிய ரீதியான கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. இதை விட மிகச் சிறிய வயதில் புகை பிடித்தவர்களும் இங்குள்ளனர். விளையாட்டுக்காக பாட்டன் பாட்டி பழக்கியதால் மூன்று வயதிலேயே புகை பிடித்த சம்பவமும் இங்கு நடந்துள்ளது. தென் வேல்ஸ்ஸில் உள்ள மேர்திர் டிட்பில் தான் இந்த நகரம்.
மேலும்மேலும்