
அதில் சீனா அதிபர் ஹீஜிந்தாவோ முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தில் இருந்தார்.
அவரை பின்னுக்கு தள்ளி விட்டு சீன அதிபர் முந்தி உள்ளார். ஒபாமா 2-வது இடத்தில் இருக்கிறார்.
சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா 3-வது இடத்திலும் ரஷிய பிரதமர் புதின் 4-வது இடத்திலும், போப் ஆண்டவர் 5-வது இடத்திலும் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியகாந்தி 9-வது இடத்தை பிடித்து உள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் 18-வது இடத்தில் இருக்கிறார். இந்திய தொழில் அதிபர்களான முகேஷ் அம்பானி, லட்சுமி மித்தல் ஆகியோரும் இதில் இடம் பிடித்து உள்ளனர்.
முகேஷ் அம்பானி 34-வது இடத்திலும், லட்சுமி மித்தல் 44-வது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் பின்லேடனும் இருக்கிறார்.
அவர் 57-வது இடத்திலும், தாவூத் இப்ராகிம் 63-வது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் கயானி 29-வது இடத்தில் இருக்கிறார்.