புதன், 2 மார்ச், 2011

மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அத்தியாவசியமானது! பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்


சிறந்த முறையில் தாய்ப்பால் ஊட்டப்படும் பிள்ளைகள் புத்தி சாதுர்யம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

முதல் நான்கு வாரங்களும் தொடர்ந்து தாய்ப்பாலூட்டப்படும் ஒரு பிள்ளை, பாடசாலை செல்லும் பருவத்தில் ஆரம்பக்கட்டத்திலும், இரண்டாம் நிலையிலும் அவற்றின் விருத்தியில் மிகச்சிறந்த தாக்கம் கொண்டவையாகக் காணப்படுகின்றன, என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 



தாய்ப்பாலூட்டப்படும் பிள்ளைகள் வாசிப்பு, எழுத்து, மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் ஐந்து, ஏழு,11 மற்றும் 14 ஆகிய வயதுகளில் சிறந்து காணப்படுகின்றனர். தாய்ப்பால் பிள்ளையின் நோய் எதிர்ப்புச் சக்தியை நன்கு கட்டியெழுப்பக்கூடியது என்பது நீண்டகாலமாக அறியப்பட்ட ஒரு விடயமாகும். 

கேட்டல் சம்பந்தமான கோளாறுகள், வயிற்றில் புழுப்பிரச்சினை, ஆஸ்த்துமா என்பனவற்றுக்கும் சிறந்த நிவாரணியாக தாய்ப்பால் நீண்டகாலமாகக் கண்டறியப் பட்டுள்ளது. ஆனால் தாய்ப்பால் பிள்ளைகளின் புத்திகூர்மைக்கும் சிறந்தது என்பது பற்றிய ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. 

தற்போது இதுவும் விஞ்ஞான ரீதியாக நிரூபணமாகியுள்ளது. தாய்ப்பால் சிறந்த சுகாதார நன்மைகளை வழங்கக் கூடியது என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். 

தற்போது அது மூளை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த துணையாக உள்ளமை தெரிய வந்துள்ளது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாய்ப்பாலூட்டலைப் பொறுத்தமட்டில் ஐரோப்பாவில் மிகவும் பின்னணியில் இருக்கும் நாடு பிரிட்டன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 

பிரிட்டனில் புதிதாக தாய்மையடையும் பெண்களுள் 24 வீதமானவர்கள் பாலூட்டுவதைப் பற்றி எண்ணிக் கூடப் பார்ப்பதில்லை, இதில் எந்தத் தாய்மாரும் இதை ஒரு குற்ற உணர்வாகக் கூடக் கருதுவதில்லை, என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன