மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் மண்முனைத்துறை பாலம் ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன் அடுத்த வருடத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ளது.
மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் விடா முயற்சியின் பயனாக
இந்தப்பாலத்தினை ஜப்பானிய அரசு நிருமாணிக்கவுள்ளது.
இந்தப்பாலத்தினை ஜப்பானிய அரசு நிருமாணிக்கவுள்ளது.
அவரின் வேண்டுகோளின் பேரில் பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இப்பாலத்தின் நிர்மாண வேலைகள் தொடர்பாக நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஆராய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் ஜப்பானிய பிரதி நிதிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநான், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், பொறியியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்பாலத்தின் நிர்மாண வேலைகள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டதுடன் அதன் ஆவணங்களையும் ஜப்பானிய பிரதிநிதிகள் – பிரதியமைச்சர் முரளிதரனிடம் கையளித்தனர்.
இதையடுத்து பாலம் அமையவுள்ள மண்முனைதுறையடிக்கு சென்று அதன் இடத்தையும் பார்வையிட்டனர். இப்பாலத்தின் நிர்மாண வேலைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நிறைவு செய்யப்படுமென ஜெய்க்கா நிறுவனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் தெரிவித்தார்.
பல கோடி ரூபா செலவில் அமையவுள்ள இப் பாலத்தின் மூலம் படுவான்கரை மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.